வா என் தேவதையே!!



விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே இருப்பதெல்லாம் தூரமா என்று தோன்றுகிறது,
நீ என்னை விட்டு பிரிந்திருக்கும் இந்த தருணத்தில்!!
சித்திரைக்கும் பங்குனிக்கும் இடையே இருப்பதெல்லாம் காலமா என்று தோன்றுகிறது,
நீ என்னுடன் பேசாது இருக்கும் இந்த தருணத்தில்!!
சந்தனதிற்கும் சவ்வாதிற்கும் இருப்பதெல்லாம் மணமா என்று தோன்றுகிறது,
உன் வாசத்தை நுகராத இந்த தருணத்தில்!!
என் தேவதையே,
நீ வந்து விடு,
நாம் நிலவில் மனை எழுப்பி குடியேரலாம்,
நட்சத்திரங்களை விட்டில் பூச்சிகளாக்கி,
விளக்காக்கலாம்,
அகண்ட வெளியையே உடுப்புகளாக்கி உடுத்துக் கொள்ளாலாம்,
பசித்தால்?
பசித்தால் என்ன, கதிரவனை கட்டைகளாக்கி அடுப்பெரிக்கலாம்,
வானத்தை வட்டமாக வெட்டி விருந்தே வைக்கலாம்!
வா என் தேவதையே,
என் மனது இங்கு உனக்காக பசித்திருக்க,
என் வயிற்றினை நிரப்பிக்கொள்ள விருப்பமில்லை எனக்கு..
வா என் தேவதையே,
வானத்தில் ண்த்துப்பூச்சிகளாய்த் திரிவோம்!!