காதல் to கல்யாணம்


ஆண் கயிறு நீட்டலிலும்,
பெண் கழுத்து நீட்டலிலும்
சுபம் பெறுகிறது காதல்;


சிலவேளை இருவரில் ஒருவர்
கம்பி நீட்டலிலும்

கவிதைக் காதல்


காவியத்தின் இலக்கணமாய் நம் காதல்;
கவிதையின் உருவமாய் நீ;
அட, ஹைக்கூ வாகிப் போனதே,
உன் சிரிப்பும்,
அதன் பின்னால் தொலைந்த
என் கவலைகளும்! :)

பிரம்மை!


ஏனோ தெரியவில்லை,
காதல் என்ற சொல்லும்,
காதலி என்ற பதமும்,
அழகு என்னும் வார்த்தையும்,
தேவதை என்னும் சீரும்,
தோற்றுவித்துச் செல்கின்றன,


இதழின் ஓரம் ஒரு புன்னகையையும்,
விழியின் ஓரம் உனது பிம்பத்தையும் :)

தேவதையைக் கண்டேன்!

நீ தான் இவ்வுலகின் இராணி என்றேன்,
ஆட்சி செய்ய விருப்பமில்லை என்றாய்;
நான் தானே உன் உலகம் என்றேன்,
உலகம் எப்படி இராணியை ஆளும் என்று வினவி
பின் சிரிக்கலானாய் நீ;
அண்ட வெளியையும் ஆளும் இராணியையும் மறந்து
தேவதையைக் காணலானேன் நான்!