தேவதைக்காதல் - அத்தியாயம் மூன்று

முந்தைய அத்தியாயங்கள்

அருகில் வந்த அவள்,
நெருங்கினாள் அவனை!!

வியர்த்தது;
நடனமே ஆடிராத அவனது கால்கள்,
பரதமே ஆடின; அவனையும் அறியாமல்!

"யாம் என்ன எரிசினக் கொற்றகையா?
உமது... மன்னித்திடுங்கள் நாதா... 
யாம் என்ன எரிசினக் கொற்றகையா?

உங்களது முகம் இப்படி வியர்க்க!


நான் உங்கள் தாரம்!
மேலும், நான் அருளப்பட்டவள்-
உங்கள் மனைவியாக!
மேலாகவும், நான் அருளப்பட்டவள்-
நீங்கள் என் துணைவனாக!!"

இறை நோக்கி உடுத்த காவி துறந்தான் அவன்;
இறையே உடுவித்த காரிருள் நீக்கும் வென்மை துறந்தாள் அவள்!!

மானுடன் ஆனான் அவன்,
அவளை "மானுடள்" ஆக்கி!

வாயுவானவன் மரங்களில் மத்தளம் மீட்ட,
வருனனோ வான் பிளந்து மழையாக தூர,
அக்கினியானவன் யாகமாய் வளர,
பறவைகளின் "கீச்சுகள்" வாழ்த்துகளாக,
சிற்பியினுள் துயில் கொண்ட
முத்தினை அனுவித்தான் மாலையாக்கி;
மாங்கல்யமாகவும் ஆக்கி!!
பூமித்தாயும் வாழ்த்தினாள் தன் பங்குக்கு,
உடலைக் குலுக்கி; செல்லமாய்!!

பட்டென்று பணிந்து வணங்கினாள் அவனது பாதங்களை!
தமிழகத்து தேவதையாய் இருப்பாள் போலும்!!

இனிதே நிறைவேறியது தேவதையின் திருமணம்!

நாட்டில் வசிக்கும் நாரதர்களைப் போல்,
தாரத்தின் தாய் வீட்டு சீதனம் கொண்டு தான்
தொழில் தொடங்க வேண்டும் என 
இதுவரை நினைக்கவில்லை,
காட்டில் வசிக்கும் அவன்.