தேவதைக்காதல் - அத்தியாயம் நான்கு

முந்தைய அத்தியாயங்கள்

காட்டில் இல் அமைத்து
இல்லறம் புரிய தொடங்கினார்கள் அவர்கள்!


உயிர் தொடங்கி மெய் ஈராக,
அகரம் தொடங்கி சிகரம் ஈராக,
நினைவு தொடங்கி கனவு ஈராக,
வாழ்வு தொடங்கி சாவு ஈராக,
இத்யாதி தொடங்கி இத்யாதி ஈராக,

அனைத்தும் அவளே என்றான்,
மோகம் இருந்த முப்பது நாளைக்கே!!!

இனித்தது இல்லறம்,
ஆசை இருந்த அறுபது நாளைக்கே!!


இப்பொழுது கேட்கச் சொன்னான் அவன்
"தேவதையை மனம் செய்து வைத்தீர்கள்,
அவளை யாம் பார்த்துக்கொள்ள பொருள் செய்து வைக்கவும்"
இறையிடம் அவன் மனைவி வாயிலாக!!


திகைப்புற்ற அவள் கேட்டாள்,
"வரதட்சனையாகவா நாதா?"


"இல்லை இல்லை.
யாம் கொண்ட தவத்துக்கு
முதல் வரமாக உன்னைத் தருவித்து,
எனக்குத் திருவித்தான் அவன்;
தங்கத்தட்டினில் தேனும் பாலும்
விட்டு விரசி
சோறுண்ட நீ, இவ்வனத்தில்
கிழங்கும் விலங்கும் உண்கிறாயே!!
அதைக்கொண்டே கூறினேன், அவ்வாறு"
இது அவனின் உறை..


"மணல் அகழ்ந்த கிழங்கு உண்டாலும்,
மனம் மகிழ்ந்து உண்கிறேன் நாதா
இறையிடம் கேட்க வேண்டாமே!!!"




தன் வாழ்வில், முதன் முறையாக
ஆண் என்னும் மமதை கொண்டு பேசினான் அவன்
"கேள் என்றாள் கேள்"

எதிர்பாரா இக்கூற்றால், திகைப்பின் உச்சிக்கு சென்ற அவள்,
சுதாரித்துக் கூறினாள்,
"உங்களுக்கு வேண்டுவன வரமாக கேட்டால்,
நான் வேண்டுவேன் இறையிடம்..
மாறாக எனக்காக ஒன்றும் கேட்க மாட்டேன்"
தீர்மானமாக

"சரி.. அப்படியானால், வரதட்சனையாகவே கேள்!!!"
கனலாய் வந்தன வார்த்தைகள்
தொடர்ந்தான்,
"உன்னுடன் வரவேண்டியவை அவை,
முதல் வரத்தின் அங்கமாகவே ஈய சொல் இறையை"
இறைக்கு சொல் அளவிலேயே இருந்தது மரியாதை


சென்றாள் அவள், தன் 'தாய்' வீட்டுக்கு!!!


கோபித்துக் கொண்டா?? இல்லை
அவன் வேண்டியதை வேண்டவா??