தேவதைக்காதல் - அத்தியாயம் ஐந்து



முந்தைய அத்தியாயங்கள்


தாய் வீடு திரும்பிய அவளிடம்,தாயும் ஆன அவன் கேட்டான்:
"ஏனம்மா திரும்பி விட்டாய்??"


கேட்பது கடவுளே ஆயினும்,
கணவனை விட்டு தர விரும்பாத அவள் கூறினாள்:


"மனம் முடித்துத் தந்தீர், மறந்தும் விட்டீரோ??
தாரமான பின், தாய் வீடு வர உரிமையில்லையாஎனக்கு??"


முற்றும் அறிந்தவனாக இருந்தாலும்,


தனையையின் இக்கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், 
"வரலாமே
என்றார் இறை.....


மண்ணில் வாழும் கணவனின் நிலையோ, பரிதாபம்:


தேவதை தன்னை விட்டு சென்றதால் வந்த சோகத்தை, அவனது ஆனவம் நிழலாக்கியது!!
ஆனால் வெகுநாளைக்கு அல்ல;
பதினான்கு வருடம் துறவிருந்த அவனால், 
இல்லறம் அனுபவித்த பின், 
இப்பொழுது பதினான்கு நாட்கள் கூட தாங்க முடியவில்லை, 
துறவரத்தின் வலியை!



தேவதை ஆனாலும், அவளொன்றும்-அவளும் ஒன்றும் 
விதிவிலக்கல்ல இதற்கு.


தான் பெற்றும், பெறாத இரு வரத்திற்காக வருந்தாத அவள் கணவன்,
பெற்று தொலைத்த ஒரு வரமாகிய அவளுக்காக 
வருந்திய நிலையைப் பொருத்துக்கொள்ள இயலாத அவள்,


மனம் இறங்கினாள்;
மண்ணிற்கும் இறங்கினாள்,
மீண்டும்..


காட்டிலிருந்து நகர் நோக்கி நகரத்தொடங்கினர், இருவரும்