தேவதைக்காதல் - அத்தியாயம் நான்கு

முந்தைய அத்தியாயங்கள்

காட்டில் இல் அமைத்து
இல்லறம் புரிய தொடங்கினார்கள் அவர்கள்!


உயிர் தொடங்கி மெய் ஈராக,
அகரம் தொடங்கி சிகரம் ஈராக,
நினைவு தொடங்கி கனவு ஈராக,
வாழ்வு தொடங்கி சாவு ஈராக,
இத்யாதி தொடங்கி இத்யாதி ஈராக,

அனைத்தும் அவளே என்றான்,
மோகம் இருந்த முப்பது நாளைக்கே!!!

இனித்தது இல்லறம்,
ஆசை இருந்த அறுபது நாளைக்கே!!


இப்பொழுது கேட்கச் சொன்னான் அவன்
"தேவதையை மனம் செய்து வைத்தீர்கள்,
அவளை யாம் பார்த்துக்கொள்ள பொருள் செய்து வைக்கவும்"
இறையிடம் அவன் மனைவி வாயிலாக!!


திகைப்புற்ற அவள் கேட்டாள்,
"வரதட்சனையாகவா நாதா?"


"இல்லை இல்லை.
யாம் கொண்ட தவத்துக்கு
முதல் வரமாக உன்னைத் தருவித்து,
எனக்குத் திருவித்தான் அவன்;
தங்கத்தட்டினில் தேனும் பாலும்
விட்டு விரசி
சோறுண்ட நீ, இவ்வனத்தில்
கிழங்கும் விலங்கும் உண்கிறாயே!!
அதைக்கொண்டே கூறினேன், அவ்வாறு"
இது அவனின் உறை..


"மணல் அகழ்ந்த கிழங்கு உண்டாலும்,
மனம் மகிழ்ந்து உண்கிறேன் நாதா
இறையிடம் கேட்க வேண்டாமே!!!"




தன் வாழ்வில், முதன் முறையாக
ஆண் என்னும் மமதை கொண்டு பேசினான் அவன்
"கேள் என்றாள் கேள்"

எதிர்பாரா இக்கூற்றால், திகைப்பின் உச்சிக்கு சென்ற அவள்,
சுதாரித்துக் கூறினாள்,
"உங்களுக்கு வேண்டுவன வரமாக கேட்டால்,
நான் வேண்டுவேன் இறையிடம்..
மாறாக எனக்காக ஒன்றும் கேட்க மாட்டேன்"
தீர்மானமாக

"சரி.. அப்படியானால், வரதட்சனையாகவே கேள்!!!"
கனலாய் வந்தன வார்த்தைகள்
தொடர்ந்தான்,
"உன்னுடன் வரவேண்டியவை அவை,
முதல் வரத்தின் அங்கமாகவே ஈய சொல் இறையை"
இறைக்கு சொல் அளவிலேயே இருந்தது மரியாதை


சென்றாள் அவள், தன் 'தாய்' வீட்டுக்கு!!!


கோபித்துக் கொண்டா?? இல்லை
அவன் வேண்டியதை வேண்டவா??

தேவதைக்காதல் - அத்தியாயம் மூன்று

முந்தைய அத்தியாயங்கள்

அருகில் வந்த அவள்,
நெருங்கினாள் அவனை!!

வியர்த்தது;
நடனமே ஆடிராத அவனது கால்கள்,
பரதமே ஆடின; அவனையும் அறியாமல்!

"யாம் என்ன எரிசினக் கொற்றகையா?
உமது... மன்னித்திடுங்கள் நாதா... 
யாம் என்ன எரிசினக் கொற்றகையா?

உங்களது முகம் இப்படி வியர்க்க!


நான் உங்கள் தாரம்!
மேலும், நான் அருளப்பட்டவள்-
உங்கள் மனைவியாக!
மேலாகவும், நான் அருளப்பட்டவள்-
நீங்கள் என் துணைவனாக!!"

இறை நோக்கி உடுத்த காவி துறந்தான் அவன்;
இறையே உடுவித்த காரிருள் நீக்கும் வென்மை துறந்தாள் அவள்!!

மானுடன் ஆனான் அவன்,
அவளை "மானுடள்" ஆக்கி!

வாயுவானவன் மரங்களில் மத்தளம் மீட்ட,
வருனனோ வான் பிளந்து மழையாக தூர,
அக்கினியானவன் யாகமாய் வளர,
பறவைகளின் "கீச்சுகள்" வாழ்த்துகளாக,
சிற்பியினுள் துயில் கொண்ட
முத்தினை அனுவித்தான் மாலையாக்கி;
மாங்கல்யமாகவும் ஆக்கி!!
பூமித்தாயும் வாழ்த்தினாள் தன் பங்குக்கு,
உடலைக் குலுக்கி; செல்லமாய்!!

பட்டென்று பணிந்து வணங்கினாள் அவனது பாதங்களை!
தமிழகத்து தேவதையாய் இருப்பாள் போலும்!!

இனிதே நிறைவேறியது தேவதையின் திருமணம்!

நாட்டில் வசிக்கும் நாரதர்களைப் போல்,
தாரத்தின் தாய் வீட்டு சீதனம் கொண்டு தான்
தொழில் தொடங்க வேண்டும் என 
இதுவரை நினைக்கவில்லை,
காட்டில் வசிக்கும் அவன்.

தேவதைக்காதல் - அத்தியாயம் இரண்டு

முந்தைய அத்தியாயம்

வாழ்வில் முதல் முறையாகப் பெண்ணைப் பெண்ணெனக் கண்ட காட்சி சிலாகித்தது, அவனை!

பெண்கள் அனைவரும் தேவதைகள் இலர்.. ஆனால் தேவதைகள் அனைவரும் பெண்கள் தானோ? இல்லை, தேவதைகளால் காதலிக்கப்படும் ஆண்களும் தேவதைகளே!

அவ்வகையில் அவனும் தேவதையாகப் போகிறான்!

"அன்பிலும் அழகிலும் பண்பிலும் பணிவிலும் சொல்லிலும் செயலிலும் இன்ன பிறவிலும் சிறந்தவள் எவளோ, அவளை அருளீர்" என்றான் முதல் வரத்தின் முற்று அங்கமாக..

"மற்ற மங்கைகளுடன் யான் இங்கனம் மறைய,
உன் தேவதையுடன் நீ இங்கு இனைய,
மற்ற இரு வரம் ஈவாள் அவளே" எனப் பொழிந்து, பின்  மறைந்தார் இறை!

அக்குறிஞ்சி மரங்கள் பொன்னென மின்ன,
தாமரைத் தேகமும்,
அங்கயற்கண்ணும்,
நரை தோய்த்த பலாச்சுளை உதடும்,
தங்க இடையும்,
நளின நடையும் கொண்டு, 
அவ்வனத்தில் வனப்புடன் நடந்து வந்தாள், 
அவனை நோக்கி, 
அவனை தேவதையாக்கிய தேவதை!

அடுத்த அத்தியாயம்

தேவதைக்காதல் - அத்தியாயம் ஒன்று

தேவதைக்காதல்

உலக வாழ்வு துறந்து துறவு வாழ்வு மேற்கொள்ளும் மானுடன் ஒருவன் தான் பூண்ட துறவறத்தின் பயனாக மீண்டும் உலக வாழ்வு தரித்து காதல் செய்யும் கவிக்கதை :)


அத்தியாயம் ஒன்று

பன்னிரெண்டாம் அகவையில் பெற்றோரை இழந்து,
ஊனுக்கு ஊண்தேடி கானகம் புகுந்து,
பெற்றதில் பாதி இறை மிசை படைத்து,
மீதி இரை கொண்டு தேகம் வளர்த்த அவனுக்கு,
அத்தனிமையில் துணையாய் இருந்தவர் இறை மட்டுமே!!

உடலின் இரை தேடல் குறுகி,
மனதின் இறை தேடல் நெடுகியது, அவனுக்கு!!

பத்தின் பிந்தைய மூன்றாம் அகவையில்,
இறை நோக்கி, இரை துறந்து, இருக்கலான அவனது தவம்,
மூபத்தின் முந்தைய மூன்றாம் அகவையில் கலைந்தது,
இறைவனின் தோன்றலால்!!
"பதின்ம வயது தொடங்கி பதினான்காண்டுகள்
என்னை நோக்கி நீ இருந்த தவத்தின் வலிமை கண்டு மெச்சுகிறேன் மானுடனே!
உன் தவத்தின் பயனாக மூன்று வரம் தருகிறேன்,
வேண்டுவன கேள்" என்றார் இறை!!
துறவு துறக்க விரும்பிய அவன்,
இறைவனின் புருவம் உயர கேட்டான் முதல் வரத்தை!
"யாம் காதலிக்க வேண்டும் ஒரு தேவதை"
ஏற்றுக் கொண்டான் தேவன் அதை,
வந்து இறங்கினாள் ஒரு தேவதை!
அல்ல, பல நூறு தேவதை!!

அடுத்த அத்தியாயம்